தெற்கு மாட வீதியில் நடைபெற்ற தெரு முனை தடுப்பூசி முகாமில் பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் இன்று காலை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த கிளினிக்குக்களுக்கு சென்றிருந்தனர். ஆனால் சுகாதார ஊழியர்கள் நாளை வருமாறு கூறி யாருக்கும் தடுப்பூசி செலுத்தவில்லை. ஏற்கனெவே சில இடங்களில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. நேற்று முதல் மயிலாப்பூரில் தெரு முனை தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெற்கு மாட வீதியில் கற்பகம் உணவகம் அருகே தடுப்பூசி முகாம் இன்று காலை பத்து மணியளவில் நடைபெற்றது.

மயிலாப்பூர் வியாபாரிகள் சங்கம் இந்த தடுப்பூசி முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர். இங்கு பெரும்பாலான வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். காலையில் இங்கு தடுப்பூசி போட வந்திருந்த பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். அதேநேரத்தில் சுமார் பன்னிரண்டு மணிக்கு மேல் வந்த பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இங்கு சுமார் முந்நூறு டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டது. இன்று காலை முதல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவது சம்பந்தமாக பெரும் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திருப்பூரில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நாளை முதல் அனைத்து இடங்களிலும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி எவ்வித குழப்பமும்மின்றி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Verified by ExactMetrics