அரசு நடத்தும் கிளினிக்குகளில் உள்ள ஊழியர்களுக்கு தினமும் மதிய உணவு, ஸ்னாக்ஸ்களை வழங்கும் மயிலாப்பூர் மக்கள்.

அபிராமபுரத்தில் வசிக்கும் வசுமதி ரங்கராஜன் என்பவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள சுகாதார மையத்திற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுகளின் சேவையை பார்த்து விட்டு அவர்களுக்கு ஏதாவது உதவி புரிய வேண்டும் என்று நினைத்து, மாலை ஸ்னாக்ஸ்களை வீட்டிலேயே தயாரித்து அவர்களுக்கு வழங்கியுள்ளார். இதை பார்த்த அவர்களது குடும்பத்தார் மதிய உணவை கொடுக்க விரும்பி மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களும் மயிலாப்பூரில் உள்ள மற்ற கிளினிக்குகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்துவருகின்றனர். இந்த செய்தியை அறிந்த கிண்டி மற்றும் ஓ.எம்.ஆரில் வசிக்கும் மக்களும் அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு உணவு மற்றும் ஸ்னாக்ஸ் வழங்கும் சேவையை செய்து வருகின்றனர். இது போன்று உங்கள் பகுதிகளில் யாராவது சேவை செய்து வந்தால் அவர்களை பற்றிய தகவல்களை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் முகவரி mytimesedit@gmail.com

Verified by ExactMetrics