யுனிவர்சல் கோவிலில் மஹா சிவராத்திரி நிகழ்ச்சி

மகா சிவராத்திரியை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் யுனிவர்சல் கோவிலில் இன்று இரவு முழுவதும் பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெறவுள்ளது.

இன்று மார்ச் 1ம் தேதி மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது.

மார்ச் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஹோமம் மற்றும் 5:15 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது என்று மடத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் முகக்கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Verified by ExactMetrics