தேவாலயங்களில் தவக்காலம் மார்ச் 2 முதல் சாம்பல் புதனுடன் தொடக்கம்.

சாம்பல் புதன் இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது மற்றும் உள்ளூர் கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் புதன் ஆராதனைகள் நடைபெறவுள்ளது.

இந்த நாள் தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது – சிந்தித்து தவம் செய்ய வேண்டிய நேரம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச் சாம்பல் புதன்கிழமையை இரண்டு திருப்பலிகளுடன் நடத்துகிறது – ஒன்று தமிழில் காலை 6.15 மணிக்கும் மற்றொன்று ஆங்கிலத்தில் மாலை 6.15 மணிக்கும். அருட்தந்தை ஜோசப் விக்டர் ஜே.டி.எச். மாஸ் நடத்துகிறார். மாஸை தொடர்ந்து பிரசங்கத்தையும் வழங்கவுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று மாலை 6.15 மணிக்கு புனித ஆராதனை மற்றும் சிலுவை வழிபாடு ஆங்கிலத்திலும் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணிக்கு தமிழிலும் நடைபெறும்.

அருகிலுள்ள பிற தேவாலயங்களிலும், இதே போன்ற சிறப்பு சேவைகள் / ஆராதனைகள் நடக்கும்.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

Verified by ExactMetrics