மெரினாவில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரி உற்சவம்

இன்று மாசிமக தீர்த்தவாரி உற்சவம் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே நடைபெற்றது. நகரில் இருந்து வெவ்வேறு கோவில்களிலிருந்து சாமிகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து அருள்மிகு கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும், காலை சுமார் ஒன்பது மணியளவில் ஊர்வலமாக பல்லக்கில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Verified by ExactMetrics