கற்பகாம்பாள் நகரில் சாலையில் மூடப்படாமல் உள்ள பள்ளங்களால் பெரும் இடையூறை சந்தித்து வரும் மக்கள்.

கற்பகாம்பாள் நகர் மக்கள் இன்று காலை, வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் ஒரு பெரிய குடிமைப் பிரச்சினை பற்றி தெரிவித்துள்ளனர்.

விவேகானந்தா கல்லூரியின் சுவரை ஒட்டியுள்ள முசிறி சுப்பிரமணியம் சாலை சந்திப்பில் TANGEDCO வின் உள்ளூர் பிரிவு விரிவான பணிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் தோண்டப்பட்ட இடம் முறையாக மறுசீரமைக்கப்படாததாகவும், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் விளைவாக அது மூழ்கியதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், ஆங்காங்கே தடுப்பு வேலிகள் கிடக்கின்றன என்றும் கூறுகின்றனர்.

இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால், மக்களுக்கு பெரும் இடையூறாக ஏற்படுத்துகிறது. இங்குள்ள கல்லூரிக்கு மாணவர்களும் இந்த வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டும்.

செய்தி: மதன்குமார்

Verified by ExactMetrics