குழந்தைகளுக்கான இலவச, கோஸ்டர் ஆர்ட் பயிற்சிபட்டறை. ஆக.26ல். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சுந்தரம் பைனான்ஸ் குழந்தைகளுக்கான ஆர்ட் பயிற்சிபட்டறையை நடத்தவுள்ளது. 8 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த இலவச ஓவியப் பட்டறையில் பங்கேற்கலாம், அங்கு அவர்கள் மரத்தாலான கோஸ்டர்களில் ஓவியம் வரைவார்கள்.

இந்நிகழ்வு நிறுவனத்தின் ‘வீக்கெண்ட் அட் தி பார்க்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது ஆகஸ்ட் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 3 முதல் 5 மணி வரை, லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பதற்க்கான முன் பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு 25 குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். கலைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

பதிவு செய்ய 9445866508 என்ற எண்ணுக்கு <குழந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்> இந்த வடிவில் SMS அனுப்பவும்.

Verified by ExactMetrics