அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட விரைவில் அனுமதி, எம்.எல்.ஏ உறுதி

மந்தைவெளியில் உள்ள சென்னை மாநகராட்சியின் அல்போன்சா விளையாட்டு மைதானம் நீண்ட நாட்களாக இளைஞர்கள் விளையாட ஏற்றதாக இல்லை. ஏனென்றால் சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே மாதிரி கடைகளை வழங்க ஏற்பாடு செய்து அந்த கடைகளை தயார் செய்து, ஒரு பகுதியை மெரினா கடற்கரையிலும் மற்றொரு பகுதியை இந்த அல்போன்சா மைதானத்திலும் சேமிப்பு கிடங்குபோல வைத்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு விளையாடமுடியவில்லை.

அதே போல ஆர்ஏ. புரத்திலுள்ள சென்னை மாநகராட்சி மைதானமும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமான புகார் மயிலாப்பூர் எம்.எல்.ஏ விடம் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என்று எம்.எல். ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார்.

Verified by ExactMetrics