நீங்களும் உங்கள் காலனி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம். அதற்கு சில விதிமுறைகள் பின்பற்ற வேண்டியிருக்கும். இது போன்று கடந்த திங்கட்கிழமை எம் ஆர். சி நகரில் ஒரு முகாம் நடத்தப்பட்டது.
எம் ஆர். சி. நகர் பகுதியில் உள்ள ஜெயின் சாகரிகா என்ற நிறுவனம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நூறு வீடுகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்தது. இவர்கள் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையை தொடர்புகொண்டு அந்த பகுதியில் கடந்த மார்ச் 29ம் தேதி தடுப்பூசி முகாமை நடத்தினர். முகாம் நடத்துவதற்கு முன் சில வேலைகளை செய்தனர். மூத்தகுடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் குடியிருப்பு காவலாளி, வீட்டு வேலை செய்பவரகள், சமையல் வேலை செய்பவர்கள், அந்த பகுதியில் காய்கறி விற்பவர்கள் போன்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு அவர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் முகாம் நடத்த ஏற்பாடு செய்ததது. அங்கு சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்கண்ட சிறப்பு ஏற்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு சென்னை மாநகராட்சியின் சுகாதார ஊழியர்களுக்கு சுலபமாக இருந்தது.
இதுபோன்று உங்கள் பகுதியில் சுமார் அறுபது எழுபது குடும்பங்களுக்கு தடுப்பூசி போட விரும்பினால் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையை அணுகவும். மேலும் இதுசம்பந்தமான விவரங்களுக்கு எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரியா ராம்குமாரை தொடர்புகொள்ளவும். தொலைபேசி எண் : 9600047586
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…