பாரத் பந்த்திற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள், சாலைகளில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்.

போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளில் வேலைக்குச் செல்வதற்கு மந்தைவெளி பேருந்து நிலையத்திற்குச் வந்த பொது மக்கள் வேலைநிறுத்தம் குறித்த செய்தியால், தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்களில் ஏறுவதைக் காண முடிந்தது.

அரசு நடத்தும் தொழில்கள் மற்றும் சேவைகளை தனியாருக்கு ஒதுக்கி, தொழிலாளர் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் மத்திய அரசுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தப் போராட்டம் என்று பணிமனையில் உள்ள ஊழியர் சங்கங்களின் தகவல் பலகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பாரத் பந்த் தேசிய அளவில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.

Verified by ExactMetrics