பரம்பரா மயிலாப்பூர் கோவிலில் துளசி மரக்கன்றுகளை வழங்கினர்.

பரம்பரா துளசி சேவா இந்த ஆண்டு ஒரே நாளில் இணைந்த “அமலக்கி ஏகாதசி” மற்றும் “காரடையான் நோன்பு” விழாவில் துளசி மரக்கன்றுகளை பக்கதர்களுக்கு வழங்கினர்.

காரடையான் நோன்பு அன்று அம்பாளிடம் தங்கள் கணவர்கள் நலம் பெற வேண்டி, திருமணமான பெண்கள் ஏகாதசியை முன்னிட்டு விரதமிருந்து வழிபடுவது மரபாகும்.

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் பரம்பரா துளசி சேவாவிடமிருந்து மக்கள் துளசி மரக்கன்றுகளை பெற்று சென்றனர்; கோவில் நந்தவனத்திலும் துளசி மரக்கன்றுகள் நடப்பட்டன.

பரம்பரா பல ஆண்டுகளாக துளசி மரக்கன்றுகளை வழங்கி வருவதாகவும், இதுவரை லட்சக்கணக்கானோருக்கு விநியோகம் செய்துள்ளதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரம்பரா, எண் 46, கஸ்தூரி ரங்கா சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ளது. தொலைபேசி எண் :044-24991516

Verified by ExactMetrics