நவராத்திரி நேரத்தில் திறந்த வெளியில் காலை வேளையில் இசை கச்சேரி

மயிலாப்பூரில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நாட்களில் ஆங்காங்கே இசை கச்சேரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுனாதலஹரி என்ற அறக்கட்டளை வித்தியாசமாக காலையிலேயே திறந்த வெளியில் ‘நவராத்திரி சுப்ரபாதம்’ என்ற இசை கச்சேரி நிகழ்ச்சியை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

இன்று ஆர்.கே ஸ்ரீராம்குமார் (வயலின்) மற்றும் அருண்பிரகாஷ் (மிருதங்கம்) இவர்களின் கச்சேரி நடைபெற்றது.

குறிப்பிட்ட கச்சேரிகள் சுனாதலஹரி அறக்கட்டளையின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை கச்சேரிகளை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.