சாந்தோம் கதீட்ரலில் மயிலை மாதா திருவிழா தொடங்கியது.

சாந்தோம் தேவாலயத்தில் இப்போது மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் மட்டுமே இந்த திருவிழா நடைபெறும். கடைசி நாள் மாதா தேர் தேவாலய வளாகத்திற்குள்ளேயே ஊர்வலம் வரும்.

தற்போது கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பிரார்த்தனை கூட்டங்களில் வழக்கம் போல பங்கேற்க தேவாலயத்திற்கு வருகின்றனர். சாந்தோம் தேவாலயத்தின் தென்புறத்தில் மிகவும் பழமையான மாதா சிலை ஒன்று உள்ளது. இந்த சிலையை இங்குள்ள மக்கள் ‘மயிலை மாதா’ என்று அழைக்கின்றனர்.