ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கச்சேரிகள் தொடக்கம்.

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு கச்சேரிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அக்டோபர் 29 ம் தேதி வரை மாலை 5.30 மணி மற்றும் 7 மணிக்கு தினமும் இரண்டு நடன கச்சேரிகள் நடைபெறவுள்ளது. இந்த கச்சேரிகளில் நகரத்திலுள்ள மூத்த நாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ரசிகர்களுக்கும் சபா உறுப்பினர்களுக்கும் அனுமதி இலவசம். ரசிகர்களை அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நாட்டிய நிகழ்ச்சிகளை காண அனுமதிக்கின்றனர்.