மயிலாப்பூரில் பழுதான மின் மயான தகன வசதியை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

நான்கு வாரங்களுக்கு மேலாக மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யும் வசதி பழுதடைந்து செயல்படாமல் இருந்தது. எனவே தகனம் நிறுத்தப்பட்டது.

சென்னை கார்பரேஷனின் புதிய ஆணையர் பொறுப்பேற்ற பிறகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இப்போது உபகரணங்கள் நிறுவப்பட்டு வருகிறது, மீண்டும் மயானத்தில் தகன வசதி பயன்பாட்டுக்கு வர ஜூன் 10 தேதி வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வசதிக்கு அதிக கவனம் தேவை. இது அதிகாரிகள் மற்றும் ஜி.சி.சி மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

ஆனால், இங்கு சில அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1. இங்குள்ள மின்சார ஜெனரேட்டர் பலவீனமாக உள்ளது. எனவே மாற்றித்தர வேண்டும்.
2. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாஷ்ரூம்ஸ் மோசமான நிலையில் உள்ளது. காரணம் இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
3. கை கழுவ வசதி இங்கு இல்லை.
4. கழிவுநீர் குழாய்கள் சரியாக இல்லாததால், கழிவுநீர் தரைக்குள் ஆங்காங்கே ஓடுகிறது.
5. இந்த மயானத்தின் வளாகத்தில் மின் விளக்குகள் மிக குறைவு. சென்னை மாநகராட்சி இப்போது மாலை 6 மணிக்கு மேல் தகனம் செய்ய அனுமதிப்பதால் மின் விளக்குகள் வசதியை அதிகரித்து தர வேண்டும்.

Verified by ExactMetrics