மயிலாப்பூரில் இன்று காலை முதல் சீரான மழை

இன்று சென்னை மாநகர் முழுவதும் மயிலாப்பூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பொழிய ஆரம்பித்த மழை இன்று மாலை மூன்று மணி வரையிலும் பொழிந்து வருகிறது. மயிலாப்பூரில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு பற்றிய தகவல் இல்லை. இருந்தாலும் சில இடங்களில் எப்போதும் மழை நீர் தேங்கி நிற்கும். அதுபோல் மந்தைவெளி பேருந்து முனையத்தில் மழை நீர் தேங்கிநின்றது. இதன் பாதிப்பு அருகில் உள்ள வெங்கடகிருஷ்ணா தெருவிலும் இருந்தது. ஆனால் லஸ் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் செடிகளும் மரங்களும் இந்த மழையினால் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது.