இன்று சென்னை மாநகர் முழுவதும் மயிலாப்பூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பொழிய ஆரம்பித்த மழை இன்று மாலை மூன்று மணி வரையிலும் பொழிந்து வருகிறது. மயிலாப்பூரில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு பற்றிய தகவல் இல்லை. இருந்தாலும் சில இடங்களில் எப்போதும் மழை நீர் தேங்கி நிற்கும். அதுபோல் மந்தைவெளி பேருந்து முனையத்தில் மழை நீர் தேங்கிநின்றது. இதன் பாதிப்பு அருகில் உள்ள வெங்கடகிருஷ்ணா தெருவிலும் இருந்தது. ஆனால் லஸ் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் செடிகளும் மரங்களும் இந்த மழையினால் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது.
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…