மயிலாப்பூர் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் திறக்கப்படவுள்ளது.

மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் த.வேலு, எம்.எல்.ஏ அலுவலகத்தை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் சமூக நலக்கூடம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் அலுவலகத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கட்டிடத்தை ஏற்கனெவே முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் பயன்படுத்தி வந்தார். இந்த இடம் தொகுதியின் மைய பகுதியில் இருப்பதாலும் முன்னாள் எம்.எல்.ஏ பயன்படுத்தி வந்ததாலும் பொதுமக்களுக்கு பரீட்சயமாக இருப்பதால் இதே இடத்தில் அலுவலகத்தை தொடங்க இருப்பதாக வேலு தெரிவித்தார். இந்த இடத்தின் அருகே மாநகராட்சி அலுவலகங்களும், மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடமும் உள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது.