மே 6 முதல் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள்

மே 6ம் தேதி முதல் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மே 6 முதல் அழகுநிலையம், ஸ்பா, போன்ற இடங்களில் கொரோனா தொற்று அதிகம் பரவும் என்பதால்
மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றே பல கடைகள் மூடப்பட்டிருந்தன. கடந்த வருடம் ஊரடங்கின் போது பல சலூன் கடைகள் மூடப்பட்டது. சிலர் அந்த தொழிலை விட்டே சென்று விட்டனர். இந்த முறை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சலூனை விற்கும் நிலை ஏற்படும் என்று மயிலாப்பூரில் சலூன் நடத்திவரும் ஒருவர் தெரிவிக்கிறார்.