ஆழ்வார்பேட்டையில் கூடுதலாக திறக்கப்பட்ட தடுப்பூசி மையம் மக்களின் ஆதரவு இல்லாததால் மூடப்பட்டது.

மயிலாப்பூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப சுகாதர நிலையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே கடந்த மூன்று நாட்களாக அனைத்து சுகாதார நிலையங்களிலும் இருப்பு இருந்துள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி, ஆழ்வார்பேட்டை, சாந்தோம், ஆர்.ஏ.புரம் மற்றும் சாந்தோம் போன்ற பகுதிகளில் உள்ள மையங்களில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. கூட்டமும் இப்போது குறைவாகவே உள்ளது. காலையில் சென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி எப்பொழுது வரும் என்று சுகாதார பணியாளர்களுக்கே தெரியவில்லை. ஆழ்வார்பேட்டை அருகே பீம்மண்ண கார்டன் தெருவில் மக்களின் வசதிக்காக சமீபத்தில் கூடுதலாக ஒரு தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது. ஆனால் அந்த மையத்தில் மக்கள் சென்று தடுப்பூசி போட ஆர்வம் காட்டாததால் இப்போது மூடப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics