மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர் நடராஜின் முகநூல் பக்கம் வாழ்த்து செய்திகள் நிரம்பி காணப்படுகிறது.

மயிலாப்பூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.நடராஜ் அவர்களுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, அவர் பதவியில் இருந்த போது மயிலாப்பூருக்கு ஆற்றிய சேவைகள் பற்றியும் மற்றும் அவர் தேர்தலில் தோல்வியடைந்த வருத்தத்தையும் அவருடைய முக நூல் பக்கத்தில் மக்கள் பதிவு செய்து வருகின்றனர். இது வரை சுமார் நூறு நபர்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளனர். இதற்கு ஆர்.நடராஜ் நான் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் மயிலாப்பூருக்கு தேவையான உதவிகளை செய்வேன் என்றும், என்னுடைய தொலைபேசி எண் முகநூலில் உள்ளது தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும், என்று பதிலளித்துள்ளார்.