இயற்கையை கருப்பொருளாக கொண்ட நாட்டியரங்க நடன விழா. நாரத கான சபாவில் ஆகஸ்ட் 11 முதல்

நாரத கான சபாவின் பிரிவான நாட்டியரங்கத்தின் வருடாந்திர நடன விழா ஆகஸ்ட் 11 முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கருப்பொருளில், இயற்கை, விலங்குகள் மற்றும் பறவைகளை வாழ்வின் அங்கமாக கொண்டாடுகிறது.

சிறப்பு நடனக் கலைஞர்கள் முக்கிய கருப்பொருளுடன் தொடர்புடைய கருப்பொருள்களை விவரிப்பார்கள்.

நடனக் கலைஞர்கள் கிறிஸ்டோபர் குருசுவாமி, கே.ஆர். மானஸ்வினி, ஷிஜித் மற்றும் பார்வதி, தட்சிணா வைத்தியநாதன் மற்றும் காளி வீரபத்திரன்.

ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் தினமும் மாலையில் . அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics