கபாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்திருந்த பக்தர்கள் அனைவரிடமும் ஒரு விதமான மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. ஏனென்றால் நேற்று தமிழக அரசு வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கோவில்களை திறக்க அனுமதியளித்துள்ளது. இந்த விழா காலங்களில் அரசு இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டது மக்களிடையே சந்தோஷத்தை உருவாகியுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி கடைசி நாளான நேற்று அம்பாள் கோவிலுக்குள் ஊர்வலம் செல்வதை காண பக்தர்கள் இரவு சுமார் ஒன்பது மணி வரை கூடியிருந்தனர். இனிமேல் வாரத்தில் அனைத்துநாட்களிலும் கோவில், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் திறந்திருக்கும்.