மயிலாப்பூரில் 47.50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசுப்பள்ளியின் புதிய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் திறந்து வைத்தார்.

காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் பள்ளியில் டிசம்பர் 28 ம் தேதி மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் 47.50 லட்ச ருபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த கட்டிடத்துக்கான நிதி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சி நிதியிலிருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளி கட்டிட திறப்பு விழா ஆடம்பரம் இல்லாமல் எளிமையாகவே நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.