மயிலாப்பூர் பகுதியில் மூத்த குடிமக்களை குறிவைத்து ஏமாற்றும் பெண்.

ஒரு பெண் ஆபிசர் போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து வருவதாகவும் அவர் கேஸ் நிறுவன ஊழியர் என்றும், வீட்டில் கேஸ் அடுப்பை செக் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கேஸ் விநியோகம் கொடுக்கப்படமாட்டாது என்று ஏமாற்றி வீட்டில் நுழைந்து கேஸ் அடுப்பில் சில பிரச்சனைகள் உள்ளதாகவும் அதை சரிசெய்ய சில பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் அதற்கு நீங்கள் ஏழாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றி பணத்தை பெற்று செல்வதாக ஆழ்வார்பேட்டை சி.வி. ராமன் தெருவில் வசிக்கும் ஒரு குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏமாற்று சம்பவம் சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றுள்ளது. மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த பெண் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது.

Verified by ExactMetrics