சமீபத்தில் பெய்த மழையினால் நிரம்பி காணப்படும் வசந்த் விகார் குட்டை

கிரீன் வேஸ் சாலையில் வசந்த் விகார் என்ற ஒரு பெரிய பகுதி உள்ளது. இங்கு ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் (தத்துவவாதி) ஐடியாக்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அடிக்கடி கூட்டங்களும் இங்கு நடக்கும். இங்கு சுமார் ஆறு ஏக்கர் அளவில் திறந்த வெளி நிலம் உள்ளது. இங்கு ஒரு குட்டையும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் இந்த குட்டை நிரம்பி உள்ளது. தண்ணீரும் இங்குள்ள மைதானத்தில் தேங்கியுள்ளது.

வசந்த் விகாரில் பணியாற்றும் ஊழியர்கள் முன்கூட்டியே சாலையில் இருந்து குழாய் அமைத்து இந்த குட்டையில் விட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு வருடம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது. அருகிலுள்ள வீடுகளிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

Verified by ExactMetrics