மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஆங்கில வருடப்பிறப்பையொட்டி மெரினாவிற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். இந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக டிசம்பர் 31ம் தேதி இரவு முதல் ஜனவரி 1ம் தேதி காலை வரை மெரினாவிற்கு பொதுமக்கள் வருவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதேபோன்று பெசன்ட்நகர் கடற்கரைக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பதாகைகள் கடற்கரை பகுதிகளிலும் சாலைகளிலும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics