16 வது ஆண்டு சுனாமி நினைவு நாள் சீனிவாசபுரத்தில் அனுசரிக்கப்பட்டது.

பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரத்தில் இன்று காலை 16வது ஆண்டு சுனாமி நினைவு நாள் மீனவர் பேரவையின் சார்பாக அனுசரிக்கப்பட்டது. சுமார் நூறு பேருக்கு மேல் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நினைவஞ்சலியில் மக்கள் கடலருகே நின்று பிரார்த்தனை செய்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மெரினா கடற்கரையில் பதினாறு வருடங்களுக்கு முன் அண்ணா சமாதி முதல் பாலவாக்கம் வரை பேரலை எழும்பி கடற்கரை சாலை வரை வந்தது. இதனால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.