மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குறைந்த மக்கள் கூட்டம்.

நேற்று இரவு மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பூசைகள் நடந்தது. எப்போதும் கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு நடைபெறும் பூசைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று இரவு நடந்த பூசைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், பலூன் கடைகள் போன்ற கடைகள் இல்லை. மற்ற பகுதிகளில் இருந்து இங்கு வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாந்தோமில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் ஆங்கிலத்திலும் 11.30 க்கு தமிழிலும் பூசைகள் நடைபெற்றது. அதேபோல் வேறு பகுதிகளில் நடைபெற்ற பூசைகளுக்கு மக்கள் சிலர் வந்திருந்தனர். வழக்கம் போல குடில் மற்றும் மற்ற அலங்காரங்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Verified by ExactMetrics