மயிலாப்பூர் வடக்கு மாட வீதியிலுள்ள சரவணபவன் இருக்கும் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் பி.எம் கோவிட் கேர் (B M Covid Care Centre) என்ற மருத்துவமனை நேற்று மாலை கோவிட் நோயாளிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது . இது நங்கநல்லூரிலுள்ள பி.எம் மருத்துவமனையின் ஒரு யூனிட் ஆகும். இந்த மருத்துவமனையில் இருபத்தைந்து படுக்கைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களுக்கும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிகள் தங்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதற்கான அறிக்கையை மருத்துவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவரின் ஆய்வுக்கு பின்னரே நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் : 95144 95111.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…