மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கோவிட் நோயாளிகளுக்குக்காக புதிய மருத்துவமனை திறப்பு

மயிலாப்பூர்  வடக்கு மாட வீதியிலுள்ள சரவணபவன் இருக்கும் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் பி.எம் கோவிட் கேர் (B M Covid Care Centre) என்ற மருத்துவமனை நேற்று மாலை கோவிட் நோயாளிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது . இது நங்கநல்லூரிலுள்ள பி.எம் மருத்துவமனையின் ஒரு யூனிட் ஆகும். இந்த மருத்துவமனையில் இருபத்தைந்து படுக்கைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களுக்கும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிகள் தங்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதற்கான அறிக்கையை மருத்துவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவரின் ஆய்வுக்கு பின்னரே நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் : 95144 95111.

Verified by ExactMetrics