தினமும் காலை வேளையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும் பஜார் சாலை

ஊரடங்கு விதிமுறைகளில் தெருவோர கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது மயிலாப்பூரில் அந்த விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக தெருவோரம் இருக்கும் காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். பஜார் சாலையில் இன்று காலை எட்டு மணியளவில் சுமார் ஆயிரம் பேர் காய்கறிகளை வாங்க திரண்டு வந்திருந்தனர். அதே நேரத்தில் கடைகளும் (காய்கறி, மளிகை, இறைச்சி) நெருக்கமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. மக்கள் காய்கறிகளை வாங்க குறைந்தளவு நேரம் ஒடுக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு கூட்டமாக வந்து வாங்கி செல்கின்றனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் சிலர் தினமும் கடைகள் திறந்துள்ளதால் காய்கறிகளை வாங்க வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதை பார்க்கும் போது மக்கள் யாரும் கொரோனா பற்றி கவலைப்படுவது போன்று தெரியவில்லை.

Verified by ExactMetrics