எஸ். வி. சேகர் தனது தமிழ் நகைச்சுவை நாடகங்களை வலைதளம் வழியாக வெளியிடுகிறார். இந்த நாடகங்களை காண கட்டணம் செலுத்த வேண்டும்.

மந்தைவெளிப்பாக்கத்தில் வசித்து வரும் நாடக நடிகரும், இயக்குனருமான எஸ்.வி. சேகர் அவர்கள் தற்போது அவருடைய நகைச்சுவை நாடகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றியுள்ளார். அவ்வாறு மாற்றப்பட்ட தன்னுடைய நாடகங்களை bookmyshow.com என்ற வலைத்தளத்தில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு நாடகம் என்ற முறையில் வெளியிடுகிறார். இந்த நாடகங்களை காண்பதற்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.வி. சேகர் அவர்களின் தந்தை ஒரு நாடக குழுவை வைத்து சொந்தமாக நாடகங்களை வெளியிட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Verified by ExactMetrics