ஊரடங்கினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மீன் வியாபாரம் செய்யும் மகளிர்.

மெரினா லூப் சாலை அருகே உள்ள திறந்தவெளி மீன் மார்க்கெட் ஊரடங்கு காரணமாக குறைந்த நேரமே இப்போது இயங்கி வருகிறது. இங்கு மீன்களை விற்பனை செய்பவர்கள் பெரும்பாலோனோர் மகளிர், தற்போது உள்ள சூழ்நிலையால் இவர்களுடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடைகாலம் என்பதால் சிலர் கருவாடு விற்பனை செய்கின்றனர். கருவாடையும் தற்போது அருகிலுள்ள வீடுகளுக்கு சென்று விற்கும் நிலை இல்லை. எனவே இந்த வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.