காலனி பகுதிகளில் 30/40 நபர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ உறுதியளிப்பு

நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த விரும்பினால் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சென்னை மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்கிறார். இதற்கு உங்கள் பகுதியில் தடுப்பூசி போடாத மக்கள் குறைந்தபட்சம் 30க்கும் மேற்பட்ட மக்கள் இருக்க வேண்டும். அவ்வாறு மக்கள் எண்ணிக்கை இருந்தால் விவரங்களை எம்.எல்.ஏ வுக்கு கீழ்க்காணும் எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.
வாட்ஸ் அப் எண் : 98404 22222