கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ தயாராகி வரும் இளைஞர்கள் குழு

சாந்தோம் தேவாலயத்தின் பாதிரியார் தலைமையில் இளைஞர்கள் சேர்ந்து சென்னை நகரில் உள்ள வெவ்வேறு தேவாலயங்களில் இந்த கொரோனா தொற்று நேரத்தில் மக்களுக்கு சேவை செய்ய குழுவை உருவாக்கி வருகின்றனர். மூன்று குழுக்களை உருவாக்கி வருகின்றனர். இவர்களுடைய நிர்வாக தலைமையகம் கச்சேரி சாலையில் உள்ள பாஸ்டரல் மையத்தில் அமைய உள்ளது. ஒரு குழு மக்களுக்கு தேவையான தடுப்பூசி செலுத்தும் இடங்கள், படுக்கை வசதிகள் இருக்கும் மருத்துவமனை விவரங்கள், போன்ற செய்திகள் வழங்கவும், இரண்டாவது குழு மருந்து மற்றும் உணவு தேவைக்காகவும், மூன்றாவது குழு கொரோனவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தேவையான உதவிகளை வழங்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இளைஞர்கள் குழுவுக்கு பாதிரியார் ரொனால்டு ரிச்சர்டு ஏற்ற தலைவர். தற்போது பேராயர், ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி இந்த திட்டங்களை பார்வையிட்டு வருகிறார். திட்டவேளைகள் முடிந்த பிறகு முழு வீச்சில் இந்த இளைஞர்கள் குழு செயல்பட துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.