மயிலாப்பூரை சேர்ந்த பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எம். மகேந்தர் காலமானார்

மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் எம். மகேந்தர், பி.எஸ்.சி, எம்.பி.பி.எஸ், எம்.எஸ் (இ.என்.டி), டி.எல்.ஓ – மே 18 அன்று காலமானார். அவருக்கு வயது 69.

இவர் கடந்த ஆண்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மறைந்த எஸ். மாருதி ராவின் மகன். இவரது மகன் டாக்டர் எம். ஹரிஷ், நன்கு அறியப்பட்ட இன்டர்வென்ஷனல் நுரையீரல் நிபுணர்.

டாக்டர் மகேந்தர் ஒரு பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். இவர் மயிலாப்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராக பணியாற்றிவந்தவர். மேலும் மயிலாப்பூரில் வசித்துவரும் பெரும்பாலான மக்களுக்கு நன்கு தெரிந்தவர்.

இவர் ஒரு தீவிர புகைப்படக்காரராகவும் இருந்தார். மெட்ராஸின் ஃபோட்டோகிராபிக் சொசைட்டியின் உறுப்பினராக இருந்துள்ளார். பல பழமையான நிகழ்ச்சிகளிலும் காட்சிகளிலும் பங்கேற்றவர். மேலும் மயிலாப்பூரின் வாழ்க்கை பற்றிய படங்களை கூட படமாக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.

அவருடைய இந்த புகைப்படங்களை அவரது கிளினிக்கிலும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் காண்பித்தார். மேலும் அவருடைய குடும்பத்தை drmharish@gmail.com இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாராவது காலமானால், அவர்கள் பற்றிய விவரங்களை மயிலாப்பூர் டைம்ஸுக்கு  mytimesedit@gmail.com மின்னஞ்சல் செய்யவும்.

 

Verified by ExactMetrics