சென்னை கார்ப்பரேஷனின் சில கிளினிக்குகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளது.

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் சில கிளினிக்குகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளன. மேலும் அவர்களின் ஆதார் அட்டை விவரங்களை பதிவு செய்கின்றன.

இன்று காலை 10 மணி வரை மயிலாப்பூரிலும் அதைச் சுற்றியும் யாரும் அவ்வாறு செய்யவில்லை, மாநில அதிகாரிகள் இதுவரை அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது சம்பந்தமாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கூறினர்.

ஆனால் காலை 11 மணிக்குப் பிறகு, அப்பு தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்கில், அவர்கள் இளைஞர்களுக்கு தடுப்பூசி கொடுத்ததாகவும், அனைத்து நாட்களும் காலை 9 மணிக்குப் பிறகு வந்து தடுப்பூசி போட்டுச்செல்லலாம் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.