மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை பகுதிகளில் சுண்டல் மற்றும் இதர பொருட்களை விற்பவர்களுக்கு இப்போது புதிய வடிவமைப்பில் புதிய அங்காடிகள் சூரிய ஒளி மின்சார வசதியடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த கடைகள் வழங்கப்படுவதில்லை என்று கடற்கரை போலீஸ் நிலையம் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த கடைகளை முறைப்படுத்தி தகுதியுடையவர்களுக்கு வழங்குவது சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகிறது.
நீதிமன்றம், மெரினா கடற்கரையில் வரன்முறை இல்லாமல் கடைகள் நிறைய இருப்பதாகவும் அவற்றை முறைப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த கடைகளால் மெரினா கடற்கரை குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
அதேநேரத்தில் புதிய கடைகள் அனைத்தும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்றும், இந்த புதிய கடைகளை பெறுவதற்கு ஏற்கனெவே மெரினாவில் கடைவைத்திருந்தவர்களும் மற்றும் புதிதாக வியாபாரம் செய்ய விரும்புபவர்களும் டெபாசிட் தொகை மாநகரட்சியில் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது கடைகள் பெறுவது சம்பந்தமான பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கலங்கரை விளக்கம் முதல் எம்.ஜி.ஆர் சமாதி வரை முறைப்படுத்தப்படாத நூற்றுக்கணக்கான கடைகளால் கடற்கரை அதன் தனித்துவத்தை இழந்துவருகிறது.