கடந்த பிப்ரவரி 2ம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையன் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனும் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்களும் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் இந்த டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க அரசிடம் வலியுறுத்தி நிதி பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ஆர்.ராஜேஷ் முன்னின்று இந்த ஸ்டேடியம் அமைய பல்வேறு வகைகளில் உதவிபுரிந்துள்ளார். இந்த ஸ்டேடியத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்டேடியத்தை பொது மக்களும் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்த வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், இந்த கோயில் மற்றும் தமிழ்நாட்டின் பிற பிரபலமான கோயில்கள் பற்றிய முக்கிய தகவல்களை…
அனைத்து ஆத்மாக்கள் தினமாகக் கருதப்படும் நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை ஆர்.ஏ. புரத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள குயிபிள்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…