ராஜா அண்ணாமலைபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம்.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையன் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனும் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்களும் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் இந்த டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க அரசிடம் வலியுறுத்தி நிதி பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ஆர்.ராஜேஷ் முன்னின்று இந்த ஸ்டேடியம் அமைய பல்வேறு வகைகளில் உதவிபுரிந்துள்ளார். இந்த ஸ்டேடியத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்டேடியத்தை பொது மக்களும் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்த வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.