புனித லாசரஸ் தேர் திருவிழாவிற்க்காக வரையப்பட்ட வண்ணமயமான கோலம்

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள புனித லாசரஸ் பேராலயத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை லாசரஸ் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வருடா வருடம் ட்ரஸ்ட் மூலம் இந்த தேர் திருவிழாவை நடத்துவது வழக்கம்.

அலங்கரிக்கப்பட்ட ஒன்பது தேர்கள் பேராலயத்தை சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் வந்தது. அவ்வாறு ஊர்வலம் வரும் போது சில இடங்களில் வழக்கமாக தேர்கள் நின்று செல்லும். இந்த வருடம் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தேர் திருவிழாவின் போது மாதாவை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். அந்த வகையில் சோபியா பீட்டர் அவரது வீட்டில் மாதாவை வரவேற்கும் விதமாக வீட்டின் கதவருகே மாதா சிலையை வைத்து அலங்கரித்து அங்கிருந்து தெரு வரைக்கும் ரங்கோலி கோலம் போட்டிருந்தார்.

Verified by ExactMetrics