ராஜா அண்ணாமலைபுரத்தில் புதியதாக டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை கார்ப்பரேஷனின் அல்போன்சோ விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நிறைய பேர் கால்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் விளையாடுவார்கள். பல வருடங்களுக்கு முன் இங்கு பேட்மிண்டன் விளையாட்டுக்காக ஒரு இண்டோர் மைதானம் கட்டப்பட்டது.

தற்போது இங்கு மற்றுமொரு டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் இரண்டு தமிழக அமைச்சர்களால் திறக்கப்படவுள்ளது. இது மாடர்ன் வசதிகளுடனும் அலங்கார விளக்குகளுடனும் மற்றும் ஒரு கேலரியுடனும் அமைந்துள்ளது. மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் மாநில அரசிடமிருந்து நிதி பெற்று இந்த புதிய டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் கட்டுவதற்கு உதவிபுரிந்துள்ளார்.

அடையாறில் வசிக்கும் முன்னாள் இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ராஜேஷ் முன்னின்று, சட்டமன்ற உறுப்பினர் மூலமாக இந்த இண்டோர் மைதானம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் திறந்த பிறகு இதில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் இதர கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்படும்.

மைதானம் திறந்த பிறகு பொதுமக்களும் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Verified by ExactMetrics