கபாலீஸ்வரர் கோவில் மற்றும் சீனிவாசபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சி தற்போது காலனி மற்றும் குப்பம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் தடுப்பூசி போடுவதற்கு முகாம் நடத்தினர். இதில் சுமார் தொன்னூறு நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கு முன் இந்த பகுதியில் உள்ள மக்கள் யாரும் அரசு ஆரம்ப சுகாதார மையம் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தற்போது பங்குனி திருவிழா நடைபெறும் நேரத்தில் கபாலீஸ்வரர் கோவிலில் தடுப்பூசி போடுவதற்கு ஒரு சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள முகாமில் காலை 10 மணி முதல் 4 மணி வரை அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.