வெங்கடேச பெருமாள் கோயிலில் புதிய வாகன மண்டப கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் புதிய வாகன மண்டப கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

பங்குனி பிரம்மோற்சவத்தின் அனைத்து வாகன ஊர்வலங்களும் (மார்ச் 18 முதல்) இந்த புதிய மண்டபத்தில் இருந்து தொடங்கும்.

குதிரை வாகனம் புதிதாக செய்யப்பட்டுள்ள அதே வேளையில் சேதமடைந்த சில வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்டு புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளன.

புதிய மண்டபம் பக்தர்களின் நன்கொடை மூலம் கட்டிமுடிக்கப்பட்டது.

செய்தி: எஸ் பிரபு

Verified by ExactMetrics