மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் குளத்தில் மழை நீர் தேங்கி நிற்காததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து களிமண் கொண்டு வந்து குளத்தின் அடிப்பகுதியில் நிரப்பினர். இவ்வாறு செய்தால் மழை நீர் குளத்தில் தேங்கி நிற்கும் என்கிற நோக்கில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இப்போது இந்த வாரம் பெய்த மழையினால் தற்போது சுமார் ஒரு அடி அளவுக்கு மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும் குளத்திற்கு அருகிலுள்ள தெருக்களில் குழாய் பதித்து அதிலிருந்து வரும் மழை நீரையும் குளத்தில் சேர்த்துள்ளனர். இதன் மூலமும் தண்ணீர் கூடுதலாக குளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குளத்திற்கு வந்தால் மார்ச் மாதத்தில் சில வருடங்களாக நடைபெறாமல் இருந்த தெப்பம் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.