பெயர் பலகை இல்லை, விளம்பரம் இல்லை. ஆனால் கச்சேரி சாலையில் உள்ள இந்த கடையின் உணவு வேகமாக விற்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு நேரத்தில் சிறிய அளவில் உணவகம் தொழில் செய்து வந்தவர்களின் வியாபாரம் ஓரளவு நல்ல முறையில் நடந்தது. அந்த வகையில் கச்சேரி சாலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு கடை கடந்த மூன்று மாதங்களாக மதிய உணவை நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. வெஜிடபிள் ரைஸ், சாம்பார் சாதம், தயிர் சாதம், கேரட் சாதம், தேங்காய் சாதம், பொதினா சாதம் போன்ற சாத வகைகளை பார்சல் செய்து விற்கின்றனர். ஒரு பார்சல் விலை ரூ.40.

இந்த உணவகம் கடந்த வருடம் கூட நடைபெற்றதாகவும். ஆனால் தற்போது மதிய உணவு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் நூறு பொட்டலங்கள் விற்பதாகவும் இந்த கடையின் முதலாளி தெரிவிக்கிறார். இது தவிர இவர்கள் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் கேட்டரிங் ஆர்டர்கள் எடுத்து செய்து தருவதாகவும் தெரிவிக்கிறார். மேலும் இவர்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 97109 34733

Verified by ExactMetrics