சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எங்கேயும் இல்லை. சிலர் ஏற்கெனவே கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அதே தடுப்பூசியை போடுவதற்கு சுகாதார நிலையங்களுக்கு வந்து இருப்பு இல்லாததால் திரும்பி செல்கின்றனர்.
மேலும் முதல் முறை தடுப்பூசி போடுவதற்கு வருபவர்கள் கோவாக்சின் தடுப்பூசியை கேட்கின்றனர். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஊசி போடாமலேயே திரும்பி செல்கின்றனர். சென்னை மாநகராட்சியின் சுகாதார துறையை சேர்ந்த மூத்த அதிகாரி இன்று கோவாக்சின் தடுப்பூசி குறிப்பிட்ட அளவு வந்துள்ளதாகவும்.
இன்னும் ஒரு சில நாட்களில் மேலும் குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல் முறை தடுப்பூசி செலுத்த வருவோர் கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எந்த வகை தடுப்பூசியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும், இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்.