பி.எஸ்.பள்ளிக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட அனுமதி.

மயிலாப்பூரில் பி.எஸ்.பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அனுமதி உண்டு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளை விளையாடத் தொடங்கினர்.

பி.எஸ்.பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்ட இந்த மைதானம் சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறையால் குத்தகை ஒப்பந்தத்தை பள்ளியால் முழுமையாக நிறைவேற்ற முடியாததால் மீட்டெடுக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு ஆகியோர் இளைஞர்கள் இங்கு பல விளையாட்டுகளை விளையாடும் வகையில் மைதானத்தின் சில பகுதிகளை புதுப்பிப்பதாக உறுதியளித்தனர். சில மணிநேரங்களில், விளையாட்டு மைதானத்தை பி.எஸ்.பள்ளி மாணவர்களும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த விளையாட்டு மைதானம் உள்ளூரில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, ஏராளமான பதின்ம வயதினர் இங்கு கிரிக்கெட் விளையாடியுள்ளனர் மற்றும் இந்த மைதானத்தில் விளையாண்ட சிலர் கிரிக்கெட்டில் தங்களுக்கென்று ஒரு பெயரை உருவாக்கியுள்ளனர்.

Verified by ExactMetrics