125வது வார்டுக்கான கவுன்சிலர் அலுவலகம் கச்சேரி சாலையில் திறப்பு.

மயிலாப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த வாரம் ரிப்பன் பில்டிங்கில் பதவியேற்று, தற்போது தங்கள் வார்டுகளில் அலுவலகங்களை அமைத்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலில் 125 வார்டு கவுன்சிலர் ரேவதி அலுவலகம் அமைத்துள்ளார்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்காக செயல்பட்டு வந்த இடத்தில் 125வது வார்டு கவுன்சிலருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தை திறப்பதற்காக சிறிய விழா நடந்தது. வார்டு மக்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு தொலைபேசி இணைப்பு அமைக்கப்படும் என்று கவுன்சிலர் கூறினார்.

தற்போதைக்கு கவுன்சிலர் ரேவதியை 8428642114 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.